எனக்குப் பட்ட அறிவைப் பகிர இந்த வலைப்பூ.... கொஞ்சம் பெனாத்தலும் இருக்கும். சொற்குற்றம், பொருட்குற்றம் காணும் நக்கீரர்களே, உங்கள் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Wednesday, February 3, 2016
காடு
மனிதன் அழித்த காட்டை
மனிதனே காக்க முயல்கிறான்
தன்னலம் அதில் இருப்பதால்
இந்தக் காட்டுக்கென்று குறிக்கோள் உள்ளதா
அதட்கென்று ஒர் அறிவு உள்ளதா
உணர்வில்லா இருப்பு
கருத்தற்ற காட்சி
அதன் மதிப்பறியா மனிதன்
பிழைக்கப் புசிக்கும் விலங்கு
விதி வைத்து வளர்கிறதா காடு
அதன் வருங்காலத்தைக் கணிப்பதற்கு
சுற்றத்தின் நடுவே வாழ அது முயல்வதும் இல்லை
தன் நிலை உயர்த்திக்கொள்ளச் சுரண்டுவதும் இல்லை
தன் அழிவை நினைத்துப் பதறுவதும் இல்லை
உணர்வில்லா இருப்பு
கருத்தற்ற காட்சி
தன் நலம் மட்டுமே அறிந்த
பரிதாப மனிதன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment