Tuesday, September 27, 2016

நான்


வஞ்சனையில் ஓடும்
நிந்தனையில் வாடும்
இந்த மனமே எனது உடைமை

பொருளாக மாறாத அன்பை விளங்காது
பொருளிலே அன்பைத் துருவித் தேயும்

இத்தனி மனித பிதற்றலுக்கு
அளவு கிடையாது

பேராசையில் ஓடும்
வீண் சுகத்தில் வாடும்
இப்பிறவி சாகும் வரை
ஓர் மரணதண்டனை

இயற்கை விதி...

மழையின் சிலிர்ப்பும் மழலைச் சிரிப்பும் 
இசையின் கவர்வும் வெறும் புலன்களின் பலன்

கவியின் சொல்லும் சொல்லின் பொருளும் 
வீணாய் அற்ப  அறிவைத் தீண்டும் 

அனுபவமாய் 
இவை அனைத்தும் உள்ளே நிகழ்த்தும் 
உள்ளுணர்வே மெய்யென்றால்

அம்மெய் 
தன்னை வெளிப்படுத்தும் தருனத்தில் 
பொய்யாவது ஏனோ...

Friday, June 17, 2016

பழத்தின் பலன்

சில பழங்கள் சில பழுதுகளுக்கு
பல பழங்கள் சாப்பிடுவார்கள்
அப்பழுதுகள் சில பழங்களிலே
பலனடையும்

Friday, February 12, 2016

நீர்

அமைதியாய் புவியாடும் 
மெய்யோடும் உயிராடும் 

தாகம் தணியும் தருவாயில் 
சொர்கம் உணர்த்தும் 
நன்றி இல்லா மனிதனுக்கு 
நன்றி உணர்த்தும் 

அமைதியாய் புவியாடும்
மெய்யோடும் உயிராடும்

தாகம் தணியும் தருவாயில்
சொர்கம் உணர்த்தும்
நன்றி இல்லா மனிதனுக்கு
நன்றி உணர்த்தும்

அம்மண மனிதரை குழிப்பாட்டும்
வெளிப்புறத்தை துப்பரவும்
உட்புறத்தை உசுப்பேத்தும்

அடக்கமாய் விளையாடும் மேற்பரப்பு
உள்ளே சீண்டப்பட்டால்
பேரிடர் விளைக்கும் பெண்ணான படைப்பு

உன்மேல் மிதிப்பதை கவனிக்கும் மனம்
உன்னைக் கவனித்தால்
வெறுமைச் சுழலில் துலையுமோ
விழிக்கும் போதையில் துயிலுமோ

அமைதியாய் புவியாடும்
என் மெய்யோடும் உயிராடும்
உன்னிடத்தில் பல பாடங்கள் படிக்க வேண்டும்
உன் சிற்றலைப் பரப்பில் மெய்யுணர வேண்டும்



Sunday, February 7, 2016

காதல் வயம்


கதறக் கதறக் காதாலிக்கும் என் ஆண்மனம்
காம வயப்பட்டு உன் அருகே பன்றியைப் போல் கனைக்கும்

சீனாதானா இடுப்பழகை பார்க்கும்போதெல்லாம்
அவ்ளோதானா என நீ எண்ணாமல் என் கட்டை திரளும்

சிணுங்கிச் சிணுங்கி சிரிக்கும் உன் இதழ்கள்
என் சில்மிஷங்களை ஏற்றுக்கொண்டால்
வேட்கமுறுவது ஆணாகும் நானல்லோ

மனதில் காதல் வைத்தாலும்
கண்களுக்குத் தொட்டுணரத் தெரிவதோ
உறுப்புக் கொண்ட உன் மேனி

மனிதர் உணர்ந்துகொள்ள மனிதர் காதல் அல்ல
என் காதல் மனித உள்ளம் கொண்ட குரங்குக் காதல்

ஒருவரை ஒருவர் மேய்தாக்க இயலா இக்காதலை
நிஜமென்று எண்ணிக்கொள்

நானும் நீயும்
பல கவிஞர் வரைந்த பொய்யிலே
மெய்யாய் மிதப்போம்

Wednesday, February 3, 2016

இசை

இசை
வார்த்தை விளக்கிப் பொருள் குறுக்கிடலால்
சொல்லும் அல்ல பொருளும் அல்ல
உணர்வுகளை உணர்வுகளால் உணர்ந்தே

புற சூழலை புணர்ந்தே உணர்ந்தேன்
உயிரும் இசையும் உள்ளே உணர்ந்தேன்

வெளித்தோற்றம் கண்களில் ஈரம்
பிறர் நோக்கு மதிப்பீட்டில் பித்தன்


காடு


மனிதன் அழித்த காட்டை
மனிதனே காக்க முயல்கிறான்
தன்னலம் அதில் இருப்பதால்

இந்தக் காட்டுக்கென்று குறிக்கோள் உள்ளதா
அதட்கென்று ஒர் அறிவு உள்ளதா
உணர்வில்லா இருப்பு
கருத்தற்ற காட்சி
அதன் மதிப்பறியா மனிதன்
பிழைக்கப் புசிக்கும் விலங்கு

விதி வைத்து வளர்கிறதா காடு
அதன் வருங்காலத்தைக் கணிப்பதற்கு
சுற்றத்தின் நடுவே வாழ அது முயல்வதும் இல்லை
தன் நிலை உயர்த்திக்கொள்ளச் சுரண்டுவதும் இல்லை
தன் அழிவை நினைத்துப் பதறுவதும் இல்லை

உணர்வில்லா இருப்பு
கருத்தற்ற காட்சி
தன் நலம் மட்டுமே அறிந்த
பரிதாப மனிதன்


Tuesday, February 2, 2016

இருக்கு... ஆனா இல்லை

காமம் போனாலும் மனதில் காதல் போவதில்லை
உணர்வு போனாலும் நினைவு போவதில்லை
தேவை போனாலும் ஆசை போவதில்லை
பேய்கள் போனாலும் பயம் போவதில்லை

அனுபவம் பல இருந்தும் அடிகள் பல விழுந்தும்
அறிவின் விளிம்புகூடத் தெரிவதில்லை
தீரா இன்பமும் சோகமும் கலந்த இவ்வாழ்வில்
பதில் பல வந்தும் புதிர் போவதில்லை

Sunday, January 31, 2016

வெங்காயத் தமிழர்

பகுத்தறிவுப் பெரியவா - சமகாலக் குழப்பத்தின் முதலவா
உன் கருத்தைவிடத் தடியை விரும்பும் சிலர் மனம் உனக்குப் புரியுதா

எப்பவோ எவனோ எழுதிய வேதத்தைத் துருவித் துருவி
சிலரை வேசிமகன் என்றாய் - அந்தக் குப்பையை யார் படிச்சா முதல்ல
மறக்க வேண்டிய அவலத்தை மறுக்கா மறுக்கா வலியுறுத்தி
வெறுப்பினால் ஒர் இயக்கத்தை உருவாக்கினாய்
வேலியில் போற ஓணானை பிறர் வேட்டியில் விட்டாய்

பாமரனே ஆயினும் சிலரை விட உயர்த்தப்பட்டோர்
என்னும் தாழ்வு மனப்பான்மை விதைத்தாய் - விளைவு
நாயர் மேனன் ரெட்டி நாயுடு யதார்த்தமானார்கள்
தேவர் செட்டி பிள்ளை முதலியார் தனிக்கையானார்கள்

மனதிலிருக்கும் தாழ்மை நோய் துலக்க
பெயரை அழித்தால் பொருள் மாறுமோ
இருமனம் முடிக்கும்போதும் வீடு வாடகை விடும்போதும்
நீங்க என்ன ஆள்'னு கேக்கத்தானே செய்யறான்

இடஒதுக்கீட்டு ஆய்வு பலனற்றுத் தேங்கியுள்ளது
மேடைக் கூவல்களும் கலைமாமணி விருதற்றுப் போனது

நீ அவனைத் தொடக்கூடா தென்றால்
அவனும் உன்னைத் தொடக்கூடாது
பொதுவாப் பார்த்தால் இருவரும் தீண்டத்தகாதவர்களே

மனித நாகரீகம் தளிர இயற்கையாக நிகழும் சமூகப் பிரிவுகள்
எவனோ ஒருவன் திட்டமிட்டு செய்த சதியென
பூச்சாண்டி பிரச்சாரம் செய்வதை விட்டு விடுங்கள்

அவ்வாறு தோன்றிய இச்சாதியக் கட்டமைப்பு
காலமாற்றத்தில் அதுவாகவே மறைந்துவிடும்
அளவுக்கு அதிகமாகப் போற்றுவதும் தூற்றுவதும்
இயற்கைக்கு எதிரானவை
யதார்த்த அமைதியைக் குலைக்கும் நாசவேலை


Friday, January 29, 2016

Survival of the worst/....

இந்த உலகத்தில பொழைக்கனும்னா
ஒண்ணா திருடனும் இல்ல திருடறவனுக்கு துனைபோகனும்...

உண்மைய பேசறவன திமிரன்னும்
நல்லவன உதாசீனப்படுத்தும்..

வல்லவன..?? உண்மையா திறமை இருக்கறவன exploit செய்யும்
திருடறவனத்தான் பொழைக்க வைக்கும்..
ஏமாத்தறவன கொழுக்க வைக்கும்

அடுத்த தடவ எவனாச்சும் தன் வெற்றியையும் அடுத்தவன் தோல்வியையும் நியாயப்படுத்த 'survival of the fittest'னு சொன்னா அவன நம்பாதீங்க
Because he is one of the worst.

All the world's a stage. And it is badly cast. - Oscar Wilde

Tuesday, January 19, 2016

உனக்கெது சொந்தம்

குட்டியாடு தப்பி வந்தா
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ள நரி மாட்டி கிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுகெட்ட மனிதர்கண்ணில்
பட்ட தெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்

உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோடே சொந்தம் மாறுமடா கால 
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ந்திடும் சொந்தமடா

Sunday, January 17, 2016

கேளிக்கை உலகம்

உண்மையைச் சொன்னால் 'Grow up. Get a life' என்றும்
பிறந்த உயிரில் பாதிச் செத்துவிட்டால் உன்னை 'matured' என்றும் சொல்லும்
இந்தக் கேளிக்கை எதிர்பார்க்கும் உலகம்...

வெற்றுக்குடம்

இல்லாப் புகழ் இல்லாப் பாசம்
இல்லா அறிவு இல்லா வுடைமை
இல்லா அருள் இல்லாப் படைப்பு
எல்லாவற்றிலும் ஏமாறத் துடிக்கும் மனிதா

வெற்றிடத்தில் வெற்றுக்குடம்போல் வந்த உனக்கு
வெறுமையே நிரந்தரம்

ஆனால்
நிரப்புவதை மட்டும் நிறுத்திவிட்டால் இறப்பே!